உங்கள் பணம் இந்த Super fundகளில் இருந்தால் அது நல்லதல்ல என்கிறது அரசு

Commonwealth வங்கி, Westpac வங்கியின் BT மற்றும் Christian Super உட்பட 13 ஓய்வூதிய நிதிகள் செயல்திறன் அற்றவை என ஆஸ்திரேலிய நிதிச் சேவைத் துறையின் கட்டுப்பாட்டாளர் - The Australian Prudential Regulation Authority, சுருக்கமாக APRA, அறிவித்துள்ளது.

Worried woman reading a document

Thoughtful senior woman reading a document at home Source: iStockphoto

வாழ்நாள் முழுதும் கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்து விட்டு, ஓய்வு நாட்களை அமைதியாக அவரவர் விருப்பப்படி வாழ்வதற்காகத்தான் நாம் ஓய்வூதிய நிதியத்தில் பணத்தை சேமிக்கிறோம்.  எந்த ஓய்வூதிய நிதியில் பணத்தை சேமிப்பது என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரது விருப்பத்திற்கும் சூழ்நிலைக்குமேற்ப மாறுபடும் என்றாலும், வைப்பில் வைத்த பணத்தை விட மேலதிகமாக அந்த நிதியத்திலிருந்து பிற்காலத்தில் பெற முடியும் என்பதுதான் எல்லோரது நம்பிக்கையும்.


ஓய்வூதிய நிதியத்தை நாமே நிர்வகிக்க முடியும் அல்லது நாட்டில் இதற்காகவே இயங்கும் ஒரு நிறுவனத்தில் கணக்கு வைத்துக் கொள்ள முடியும்.
நாட்டில் சுமார் 80 MySuper சேவைகள் அப்படி இயங்குகின்றன என்று APRA சொல்கிறது.  அதில், 76 வெவ்வேறு MySuper சேவைகளின் கடந்த ஐந்து வருட செயல்திறன் வரலாற்றை APRA மதிப்பிட்டுள்ளது.   அதில் மொத்தம் 13 புற நிலை அளவுகோலை பூர்த்தி செய்யவில்லை என்று APRA அண்மையில் அறிவித்துள்ளது.
APRA Ranking of Super Funds 1/2
Source: APRA
APRA Ranking of Super Funds 2/2
Source: APRA

84 சதவீதத்திற்கும் அதிகமான சேவைகள் செயல்திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றது வரவேற்கத்தக்க செய்தி
என்று கூறிய APRA நிர்வாக குழு உறுப்பினர் Margaret Cole, செயல்திறன் அற்ற அல்லது செயல்திறன் மிகக் குறைந்த சேவைகள் குறித்து
APRA கவலை கொண்டுள்ளது
என்றார்.


தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் செயல்திறன் காட்டாத சேவைகள் புதிதாக கணக்குகளை ஏற்று நடத்த, புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும்.  செயல் திறனை மேம்படுத்துவதற்கும், அவர்களின் செயல் திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காக, செயல்திறன் குறைந்த நிதிகளில் தாம் கவனம் செலுத்துவதாக APRA கூறியது.

APRA அடையாளம் காட்டிய 13 MySuper சேவைகள் எவை?

செயல்திறன் குறைந்த 13 MySuper சேவைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
13 underperforming super funds
13 underperforming super funds. Source: APRA
ஒரு Superannuation நிதி சேவை கணக்கிலிருந்து வேறொரு நிதி சேவை கணக்கிற்கு மாறுவது மிகவும் எளிது.  அப்படி மாறுவதற்கு மேலும் கட்டணம் எதுவும் இல்லை என்பதால், மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு நிதி சேவையில் நீங்கள் உங்கள் கணக்கை வைத்திருந்தால், வேறொரு நிதி சேவையை நாடுவது நன்மை பயக்கலாம்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

 


Share
Published 1 September 2021 4:28pm
By Kulasegaram Sanchayan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand