ஆஸ்திரேலிய இசைப்பரப்பில் ஒலிம்பிக் ஒலிப்பதிவுகள்

Left: Betty Cuthbert (468) of Australia runs past the finish line to win the women's Olympic 100 meters (AAP); Australia's oldest Olympian, Frank Prihoda

L: Betty Cuthbert (468) of Australia runs past the finish line to win the women's Olympic 100 meters (AAP); R: Australia's oldest Olympian, Frank Prihoda. Source: AAP & Frank Prihoda

ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் அடையாளங்களை ஒலிவடிவாக எடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் தொடரில் ஒலி வடிவாகப் பதியப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள் சிலவற்றின் ஒலிப்பதிவுகளைத் தொகுத்து நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 

1.
2.
3.
4.
5.
6.

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் Summer Olympic Games - கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், தற்கால வாழ்க்கை முறைகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட பின்னர், கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் 1896ஆம் ஆண்டில் முதன்முதலாக நடத்தப்பட்டது.  அதன் பின்னர், இது வரை 31 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.  32 ஆவது போட்டிகள் இந்த மாதம் ஜப்பானில் ஆரம்பமாகவுள்ளது.  1956 மற்றும் 2000 ஆண்டுகள் நடைபெற்ற இரண்டு போட்டிகள் எமது நாட்டில் நடத்தப்பட்டன.  பதியப்பட்டுள்ள ஒலி வடிவங்களூடாக ஆஸ்திரேலிய கலாச்சாரத்தை எடுத்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய பதிவுகளைப் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா என்ற நாடு உருவாக்கப்பட முதலே, 1896ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், பிரித்தானியக் கொடியைத் தாங்கிய வண்ணம், தற்போதைய  விக்டோரிய மாநிலத்தில் வாழ்ந்த Edwin Flack வீரர் மட்டும் இங்கிருந்து கலந்து கொண்டார்.  ஐந்து வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட இவர், மூன்று போட்டிகளில் பதக்கங்களை வென்றார்.  பாரீஸ் நகரில் நடந்த இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள்.  அமெரிக்காவின் St. Louis நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒலிம்பிக் போட்டிகளில் தான் முதல் தடவையாக இரண்டு வீரர்கள் ஆஸ்திரேலியா கொடியுடன் பங்குபற்றினார்கள்.  Frank Gailey என்ற வீரர் நான்கு வெவ்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கு கொண்டு, நான்கு பதக்கங்களை வென்றெடுத்தார்.

அமெரிக்காவின் Los Angeles நகரில், 1932ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஒலிம்பிக் போட்டிகளின் ஒலிப்பதிவுதான் எமக்குக் கிடைத்துள்ள மிகவும் பழமையான ஒலிம்பிக் ஒலிப்பதிவாகும்.

இதற்கு முந்தைய போட்டிகளில் 18 வீரர்கள் கலந்து கொண்டார்கள் என்றாலும், பெரும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட காரணத்தால் 1932ஆம் ஆண்டு போட்டிகளில் 13 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள், 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று மொத்தமாக ஐந்து பதக்கங்களை இந்தப் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பெற்றார்கள்.  இருந்தாலும், எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒலிப்பதிவில் இவர்கள் வெற்றிகள் பதியப்படவில்லை.

இலண்டனில் 1948ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், Long Jump என்ற நீள்பாய்ச்சலில் Theo Bruce என்ற ஆஸ்திரேலிய வீரர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.  அதற்கான ஒலிப்பதிவு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக 1956ஆம் ஆண்டு, மெல்பன் நகரில் நடைபெற்றது.  அதன் தொடக்க விழா முழுமையாகப் பதியப்பட்டு காணொலியாகவும் ஒலிப்பதிவாகவும் பாதுகாக்கப் பட்டுள்ளன.

250 ஆண்கள், 44 பெண்கள் என, மொத்தமாக 294 வீரர்கள் 18 விதமான விளையாட்டுகளின் 140 போட்டிகளில் கலந்து கொண்டு, 13 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என்று மொத்தமாக 35 பதக்கங்களை இந்தப் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் வென்றார்கள்.

தற்போது உயிருடன் இருக்கும் வயதில் மிக மூத்த ஆஸ்திரேலிய ஒலிம்பிக் வீரர் Frank Prihoda கடந்த வாரம் தனது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.  இப்பொழுது Czech Republic நாடாக அறியப்படும் Czechoslovakiaவில் 1921ஆம் ஆண்டு பிறந்த Frank Prihoda, அவர் பிறந்த நாட்டின் அரசியல் சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார்.  அண்டை நாடான Austriaவில் அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டாலும், அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, அங்கிருந்து வெளியேறி, ஆஸ்திரேலியாவில் 1948ஆம் ஆண்டு புகலிடம் கோரினார்.  Alpine skiing எனப்படும் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற 1955ஆம் ஆண்டு தகுதி பெற்றிருந்தாலும், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கவில்லை.  சட்டப்படி குடியுரிமை பெறும் காலத்திற்கு முன்னரே இவருக்குத் தற்காலிக குடியுரிமை வழங்குவது என்று நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டு வழங்கப்பட்டதால் அதற்கு அடுத்த வருடம் இத்தாலிய நாட்டின் Cortina d'Ampezzo என்ற இடத்தில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டார்.  அவரது கதையை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவினர் பதிந்துள்ளார்கள்.  ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டமை குறித்து Frank Prihoda SBS செய்திப்பிரிவினரிடம் இவ்வாறு கூறினார்.

ஆசிய கண்டத்தில் முதன்முறையாக 1964ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறும் டோக்கியோ நகரில் நடைபெற்றது.  அதன் ஆரம்ப விழாவின் பதிவில், “நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் வளர்ப்பதற்காகவே ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன” என்பதை வர்ணனையாளர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்குமிடையில் பனிப்போர் நிகழ்ந்த காலமான 1980ஆம் ஆண்டு, நாடுகளுக்கிடையில் நல்லிணக்கமும் நல்லுறவும் நலிந்து காணப்பட்ட வேளையில் மொஸ்கோ நகரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஆண்களுக்கான 4 பேர் 100 மீட்டர் Medley Relay ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது.

மெல்பன் தவிர, பிரிஸ்பேன் மற்றும் சிட்னி நகரங்களும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்திருந்தன.  2000ஆம் ஆண்டு சிட்னி நகரம் விழாக்கோலம் பூண்டு ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்திருந்தது.  அது குறித்த ஒவ்வொரு நொடிப் பொழுதும் காணொலியாகவும் ஒலிப்பதிவாகவும் பதியப்பட்டு பேணப்பட்டு வருகின்றன.  பிரிஸ்பேன் நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக 1982ஆம் ஆண்டு வெளியிட்ட பிரச்சாரப் பாடல்களில் ஒன்று, “Shine on Brisbane” என்ற பாடல்.

ஐம்பது வருடங்களின் பின்னர், 2032ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடக்க இருக்கிறது.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand