படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையா?

AAP

AAP Source: AAP

ஆஸ்திரேலியாவிற்கு skilled migrants ஆக வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 2001ம் ஆண்டு முதல் இரட்டிப்பாகியிருக்கிறது.ஆனால் அவ்வாறு இங்கு வருபவர்களில் 40 வீதமானவர்கள் அவரவர் துறை சார்ந்த வேலைகளில் இல்லை என ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் Olga Klepova ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்


ஆஸ்திரேலியாவிற்கு skilled migrants ஆக வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 2001ம் ஆண்டு முதல் இரட்டிப்பாகியிருக்கிறது.

ஆனால் அவ்வாறு இங்கு வருபவர்களில் 40 வீதமானவர்கள் அவரவர் துறை சார்ந்த வேலைகளில் இல்லை என ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதை ஆமோதிக்கின்ற Curtin’s School of Managementஇன் ஆய்வு ஒன்று  skilled migrants ஆக வருபவர்கள் தமது தகுதியைவிட பாதிக்கும் குறைவான பணிகளையே செய்வதாக கூறுகின்றது.

இப்படியான நிலையில் இருக்கும் பலர் தாம் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர் எனச் சொல்கிறார் Curtin’s School of Management இன் Dr. Amy Tian.

ஆனால் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதில் இவர்கள் கையாளும் முறைகளில் ஏற்படும் தவறுகளும் இதற்கு ஒரு காரணம் என்கிறார் AMES Australia வைச் சேர்ந்த Margaret Davis.

இந்தநிலையை மாற்றுவதற்கு skilled migrantsஆக வந்தவர்கள் தாய்நாட்டில் தாம் பெற்ற கல்வித் தகமைகளையும் பணி அனுபவத்தையும் ஆஸ்திரேலிய தரத்திற்கேற்ப திறன் மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

இதை Skills Assessment, Overseas Qualification Recognition ,Recognition of Prior Learning என 3 வழிகளில் செய்யலாம்.

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே வாழ்ந்துவரும் அல்லது வேலை செய்பவர்கள் Overseas Qualification Assessmentசேவையை இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம் ஒருவர் தனது படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்தாலும் தனது தரத்தை இன்னும் உயர்த்திக்கொள்வதற்கு Overseas Qualification Assessment உதவும் என்கிறார் AMES Australia வைச் சேர்ந்த Margaret Davis.

மூன்றாவது Recognition of Prior Learning (RPL). இது பெரும்பாலும் உங்களது கடந்தகால கல்வித்தகமை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து எதிர்காலத்தில் நீங்கள் தொடரவிருக்கும் கல்விநெறிக்கு மிகவும் உதவும் என குறிப்பிடப்படுகின்றது.

கல்வித்திறன் மதிப்பீட்டுச் சேவை குறித்த மேலதிக விபரங்களுக்கு அந்தந்த மாநிலங்களிலுள்ள Department of Training and Education ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.

இது தவிர  என்ற இணையத்தளத்திலும் பல உதவிகள் கிடைக்கின்றன.




Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand