சிட்னியில் “தமிழ் பாதுகாப்பு இடம்”

Tamil Safe Space Front page.jpg

சிட்னியில் வாழும் தமிழர்களின் முயற்சியாக “தமிழ் பாதுகாப்பு இடம்” (Tamil Safe Space) எனும் முன்னெடுப்பு கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 3, 2024) சிட்னியின் Wentworthville எனுமிடத்தில் தொடங்கப்பட்டது. தமிழ் பாதுகாப்பு இடம் என்பது துயரத்தில் இருக்கின்றவர்களுக்கு ஆதரவும், பாதுகாப்பு வழங்கும் முயற்சியாகும். இந்த முன்னெடுப்பு குறித்து மருத்துவர் ஐங்கரனாதன் செல்வரத்தினம், கல்யாணி இன்பகுமார் மற்றும் மருத்துவர் தவசீலன் ஆகியோர் விளக்குகின்றனர்.


Tamil Safe Space Politicians.jpg
“தமிழ் பாதுகாப்பு இடம்” துவக்கவிழா நிகழ்வில் கலந்து உரையாற்றிய Cumberland நகர மேயர் - Councillor Lisa Lake, NSW Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Dr Hugh McDermott, பெடரல் Parramatta தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Dr Andrew Charlton மற்றும் நாடு தழுவிய அளவில் இயங்கும் துயருற்றோருக்கு ஆதரவு தரும் Roses in the Ocean அமைப்பின் Jon Eddy ஆகியோர் “தமிழ் பாதுகாப்பு இடம்” குறித்து பாராட்டுகின்றனர்.

John in Perth.jpg
“தமிழ் பாதுகாப்பு இடம்” ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி இரவு 6 மணி முதல் இரவு 9 மணி வரை வென்ட்வொர்த்வில் சமூக மையத்தில் (2 Lane Street, Wentworthville, NSW 2145) இயங்குகிறது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand