பூர்வீகக் குடிமக்களிடையேயான கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளுதல்

Portrait of three generation Aboriginal family

Portrait of three generation Aboriginal family Credit: JohnnyGreig/Getty Images

ஆஸ்திரேலியாவின் அனைத்து பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற தவறான கருத்து பலர் மத்தியில் நிலவுகிறது. இந்தப்பின்னணியில் பூர்வீகக் குடிமக்களிடையேயான கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளுவதன் அவசியம் குறித்து Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்


Key Points
  • ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள் அனைவரும் ஒரே இனக்குழுவை சேர்ந்தவர்கள் அல்ல.
  • ஏறக்குறைய 500 வகையான பூர்வீகக் குடிமக்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள் மற்றும் உறவுக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளனர்.
  • இந்த பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது பூர்வீகக் குடிமக்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கு முக்கியமானது.
இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்களிடையே உள்ள செழிப்பான பன்முகத்தன்மை அனைவரையும் வசீகரிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும்.

பூர்வீகக் குடிமக்கள் பலவகையான கலாச்சாரங்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள் மற்றும் உறவுக் கட்டமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

பூர்வீகக் குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுடன் நாம் சேர்ந்து செயற்படும்போதும் அவர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கும்போதும் இந்த குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதும் கொண்டாடுவதும் அவசியம்.

ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள் தங்கள் நிலம் அல்லது நாட்டுடன் ஒரு ஆழமான தொடர்பைப் பேணுகிறார்கள்.

இந்த தொடர்பை முழுமையாக புரிந்து கொள்ள, பூர்வீகக் குடி சமூகங்களுக்குள் இருக்கும் பன்முகத்தன்மையை ஒருவர் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதைத் தொடங்குவதற்கான சிறந்த இடங்களில் ஒன்று ஆஸ்திரேலியாவின் பூர்வீக வரைபடத்தை (Iபார்வையிடுவதாகவும் என்கிறார் மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் உள்ள Bardi Countryஐச் சேர்ந்த பூர்வீகக் குடியின மூப்பர் Aunty Munya Andrews .
_Carla-and-Aunty-Munya.jpg
Carla Rogers (left) and Aunty Munya Andrews (right), Evolve Communities Credit: Evolve Communities
Evolve Communities-இன் எழுத்தாளர், பாரிஸ்டர் மற்றும் இணை இயக்குநருமாக உள்ள Aunty Munya Andrews, பூர்வீகக் குடியின மக்களுடன் பழகும்போதும், அவர்களுடன் இணைந்து செயற்படும்போதும் மற்றும் அவர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கும்போதும், "ஒரே அளவீடு அனைவருக்கும் பொருந்தாது" என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் என வலியுறுத்துகிறார்.

ஆஸ்திரேலியாவின் பகிரப்பட்ட வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு பூர்வீகக் குடிமக்களின் பன்முகத்தன்மை பற்றிய இந்த அறிவு முக்கியமானது என்றும் கூறுகிறார் Aunty Munyaவுடன் இணைந்து பணியாற்றுபவரான Carla Rogers.

பூர்வீகக் குடி பின்னணிகொண்ட ஒருவர் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து, கலை, கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறை மற்றும் உறவுமுறைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அனைத்தும் வேறுபடுகின்றன என Aunty Munya சொல்கிறார்.

பல்கலாச்சாரம் என்று வரும்போது பூர்வீகக் குடிமக்கள் அதில் "நிபுணர்கள்" என்றும் பல்லாயிரம் ஆண்டுகளாக அதை கையாள்கின்றனர் என்றும் Aunty Munya சுட்டிக்காட்டுகிறார்.
Multigenerational Aboriginal Family spends time together in the family home
The Indigenous peoples of Australia are not one homogenous group. - Belinda Howell/Getty Source: Moment RF / Belinda Howell/Getty Images
ஜப்பானிய பின்னணி கொண்ட Dr Mariko Smith அருங்காட்சியகக் கண்காணிப்பாளர், சமூகவியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர் என பன்முகம்கொண்டவர். பூர்வீகக் குடிமக்கள் மத்தியில் உள்ள பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், ஆரம்பகாலத்தில் தான் பல சவால்களை எதிர்கொண்டதாக அவர் சொல்கிறார்.

இன்றும் பல ஆஸ்திரேலியர்கள், பூர்வீகக் குடிமக்கள் அனைவரும் ஒரே பின்னணி மற்றும் கலாச்சாரத்தைக்கொண்டவர்கள் என்ற பிம்பத்தையும் கருத்துக்களையும் வைத்திருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

இந்தவகையான மனப்பாங்கிலிருந்து விடுபட்டு பூர்வீகக் குடிமக்களின் பன்முகத்தன்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம் என Dr Mariko Smith வலியுறுத்துகிறார்.
Unsettled_Weekend
Dr Mariko Smith Credit: Anna Kucera Credit: Anna Kucera/Anna Kucera
இதை நாம் புரிந்துகொள்ளவில்லையென்றால் நமக்கே தெரியாமல் பூர்வீகக் குடி பின்னணிகொண்ட ஒருவரை புண்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சுட்டிக்காட்டுகிறார் Aunty Munyaவுடன் இணைந்து பணியாற்றுபவரான Carla Rogers.

வீட்டிலிருக்கும்போதோ அல்லது பயணம்செய்யும்போதோ ஆஸ்திரேலிய வரைபடத்தைப் பார்ப்பதன் மூலம் பூர்வீகக் குடிமக்களின் தேசங்களைப்பற்றியும் அவர்களது கலாச்சாரங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

பூர்வீகக் குடிமக்களின் பல்கலாச்சாரத்தன்மை பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் aboriginal Land councils மற்றும் உங்கள் உள்ளூர் கவுன்சில் ஆகியவற்றிடமிருந்து விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என Aunty Munya கூறுகிறார்.
Thirteen Aboriginal and Torres Strait Islander people from across Australia taking part in the inaugural Mob in Fashion initiative.
Thirteen Aboriginal and Torres Strait Islander people from across Australia are taking part in the inaugural Mob in Fashion initiative. Credit: Thirteen Aboriginal and Torres Strait Islander people from across Australia are taking part in the inaugural Mob in Fashion initiative.
பூர்வீகக் குடிமக்களின் பன்முகத்தன்மை பற்றி உங்களால் முடிந்தவரை கற்றுக்கொள்ளுமாறும் அவர்களது சமூக நிகழ்வுகளுக்குச் செல்வது உள்ளிட்ட வழிகள் ஊடாக அவர்களுடன் இணைந்து பழகுமாறும் Aunty Munya ஊக்குவிக்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand