சையோனிசம் (Zionism) என்றால் என்ன, இஸ்ரேலுக்கு எதிராக இருப்பது யூத எதிர்ப்பா?

Judicial Reform Protestors On Eliezer Kaplan Street

Associate Professor Slucki believes antisemitism can sometimes be disguised as criticism of Israel. Credit: Chuck Fishman/Getty Images

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் யூத எதிர்ப்பிற்கும் சையோனிச எதிர்ப்பிற்கும் இடையில் எங்கு கோடு வரைய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.


“யூத சமூகத்திற்குள் கூட சையோனிஸ்ட் என்ற சொல் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படவில்லை” என்று SBS Examines இடம் Executive Council of Australian Jewry என்ற ஆஸ்திரேலிய யூத நிர்வாகக் குழுவின் இணை தலைமை நிர்வாக அதிகாரி Alex Rycvhinனின் கூறினார்.

சையோனிசத்தை, “யூத மக்களின் தாயக உரிமையில் நம்பிக்கை அல்லது ஆதரவு, அவர்களின் மூதாதையர் நிலங்களின் சில பகுதிகளில் ஒரு மக்களாக சுயநிர்ணய உரிமையை நிறுவுதல்" என்று அவர் வரையறுக்கிறார்.

Zionism பற்றிய சிந்தனை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது, அது 20 ஆம் நூற்றாண்டில் வடிவம் பெற்றது. இது மத மற்றும் இன சிறுபான்மையினராக உலகம் முழுவதும் வாழ்ந்து வந்த யூத மக்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலின் பிரதிபலிப்பாக உருவாக்கம் பெற்றது.

இது, 1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் என்ற நாடும் அரசும் நிறுவப்படுவதற்கு வழிவகுத்தது.

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு எப்போதும் இருந்து வருகிறது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, இஸ்ரேல்-Hamas போர் தொடங்கியதிலிருந்து, பாலஸ்தீனத்தில் உள்ள Gaza நகரத்தின் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலிய அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"இஸ்ரேலையும் அதன் அரசையும் அதன் அரசின் நடவடிக்கைகளையும் விமர்சிப்பது நிச்சயமாக யூத எதிர்ப்பு அல்ல" என்று Australian Centre for Jewish Civilisation - ஆஸ்திரேலிய யூத நாகரிக மையத்தின் இயக்குனர் இணைப் பேராசிரியர் David Slucki கூறினார்.

ஆனால் யூத எதிர்ப்பு, சில நேரங்களில் இஸ்ரேலை விமர்சிப்பதாக மாறுவேடமிடப்படலாம் என்று அவர் கூறினார்.

Zionism, Israel மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள தற்போதைய விவாதங்கள், மக்களை மேலும் துருவப் படுத்தப் படுவதாக – இரண்டாக்குவதாக இணைப் பேராசிரியர் David Slucki, SBS Examines இடம் கூறினார்.

‘சையோனிசம் மற்றும் சையோனிச எதிர்ப்பு’ பற்றிய கேள்வி, ‘நீங்கள் நிபந்தனையின்றி இஸ்ரேலை ஆதரிக்கிறீர்களா அல்லது நிபந்தனையின்றி இஸ்ரேலை எதிர்க்கிறீர்களா?’ என்று மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

“இது அல்லது அது சரி என்று நாம் பேசுவதில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் Zionism, Israel மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள தற்போதைய விவாதங்கள், மக்களை மேலும் துருவப் படுத்தப் படுவதாக – இரண்டாக்குவதாக இருக்கிறது, ஏனென்றால் அது பெரும்பாலும் பல் கோணங்களில் சிந்திக்காமல் நல்லது - தீயது, நண்பர்கள் - எதிரிகள் என்ற அடிப்படையில் சிந்திக்க வழிவகுக்கிறது.”

மனித உரிமை வழக்குரைஞரும் புதிதாக நிறுவப்பட்ட ஆஸ்திரேலிய யூத கவுன்சிலின் நிர்வாக அதிகாரியுமான Sarah Schwartz சையோனிசத்திற்கு வேறுபட்ட வரையறையை வழங்கினார்.

“சையோனிசத்தை ஒரு அரசியல் சித்தாந்தமாக நான் நினைக்கிறேன், மக்கள் அதை எப்படிப் பார்த்தாலும் அல்லது உணர்ந்தாலும் பாலஸ்தீன மக்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை நியாயப்படுத்த இது பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.



இது போன்ற வேறு தலைப்புகளில் SBS Examines நிகழ்ச்சிகளைப் பார்க்க sbs.com.au/sbsexamines என்ற இணைய தளத்திற்கு செல்லவும். தமிழ் மொழியில் அறிய, “Available in Other Languages” என்ற பகுதியில் தமிழ் மொழியைத் தெரிவு செய்யவும்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand